தடுப்பூசி செலுத்திய 5 மாணவிகள் பாதிப்பு

அங்குருவாத்தோட்ட பகுதியில் உள்ள பாடசாலையில் 7ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Oct 18, 2024 - 09:17
தடுப்பூசி செலுத்திய 5 மாணவிகள் பாதிப்பு

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான HPV தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயது பாடசாலை மாணவிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குருவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

அங்குருவாத்தோட்ட பகுதியில் உள்ள பாடசாலையில் 7ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மில்லனிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்று அந்தப் பாடசாலையில் 7ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 26 மாணவிகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தியிருந்தது.

தடுப்பூசி போடப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஐந்து மாணவிகளுக்கு தலைவலி, வயிற்று வலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து, மில்லனிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் நோய்வாய்ப்பட்ட மாணவர்களை ஹல்தொட்ட பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அவர்களுக்கு அங்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவிகள் தற்போது ஹொரணை மாவட்ட வைத்தியசாலையின் 6 இலக்க வாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக ஹொரண வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார். 

நோய்வாய்ப்பட்ட மாணவர்கள் அனைவரும் வெனிவேல்பிட்டியில் வசிப்பவர்கள் என்றும், இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.