ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை; யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா அணியின் அரை இறுதி வாய்ப்பு தற்போது கேள்வி குறியாக மாறியிருக்கிறது.

Jun 23, 2024 - 10:24
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை; யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில்  விளையாடியது. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்களால் 20 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதயும் படிங்க: பங்களாதேஷை வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்தது இந்திய அணி!

எளிய இலக்கு நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி காத்து கொண்டே இருந்தது. அதன்படி தொடக்க வீரரான ஹெட், வார்னர் மற்றும் மார்ஷ் என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டம் விறுவிறுப்பாக செல்ல தொடங்கியது.

க்ளென் மேக்ஸ்வெல் மட்டும் ஒரு முனையில் நின்று தனி ஆளாக போராடினார் இருப்பினும் அவரும் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தாண்டி எந்த ஒரு வீரரும் ரன்களை எடுக்கவில்லை.

இதன் காரணமாக படிப்படியாக விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் குல்புதின் நைப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் சர்வேதச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக வலுவான ஆஸ்திரேலிய அணியை, ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியிருக்கிறது.

கடந்த, 2023ம் ஆண்டின் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கிட்டத்தட்ட, ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைய இருந்த நிலையில் மேக்ஸ்வெல் தனி ஆளாக நின்று வெற்றி பெற செய்திருப்பார்.

அந்த ஒரு வெற்றிக்கு ஆப்கானிஸ்தான் அணி தற்போது பழி தீர்த்தது என்றே கூறலாம். மேலும், இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா அணியின் அரை இறுதி வாய்ப்பு தற்போது கேள்வி குறியாக மாறியிருக்கிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.