SL vs WI, 1st ODI: மாஸ் காட்டிய இலங்கை அணி.. அசலங்கா, மதுஷ்க அரைசதம்; இலங்கை அபார வெற்றி!

இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இலங்கை அணியானது 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

Oct 21, 2024 - 06:55
Oct 21, 2024 - 07:21
SL vs WI, 1st ODI: மாஸ் காட்டிய இலங்கை அணி.. அசலங்கா, மதுஷ்க அரைசதம்; இலங்கை அபார வெற்றி!

இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியதை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய, துவக்க ஆட்டக்காரர்கள் அலிக் ஆதனஸ் 20 பந்தில் 10 ரன்கள், பிரண்டன் கிங் 25 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். 

அடுத்து வந்த கேசி கார்தி 58 பந்தில் 37 ரன்கள், கேப்டன் ஷாய் ஹோப் 13 பந்தில் 5 ரன்கள்எடுத்து வெளியேறினார்கள். தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரூதர்போர்டு 82 பந்தில் 74 ரன்கள், ரோஸ்டன் சேஸ் 33 பண்டில் 33 ரன்கள் எடுத்த போது, வெஸ்ட் இண்டீஸ் 38.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. 

மழை குறுக்கிட்ட காரணத்தினால் போட்டி நிறுத்தப்பட்டது. பிறகு இலங்கை அணிக்கு 37 ஓவரில் 232 ரன்கள் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. வனிந்து ஹசரங்கா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணிக்கு அவிஷ்கா பெர்னாடோ 7 பந்தில் 5 ரன், குசால் மெண்டிஸ் 8 பந்தில் 13 ரன், சமரவிக்கிரம 12 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து இலங்கை அணி நெருக்கடியில் சிக்கியது.

இன்னொரு துவக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்க மற்றும் கேப்டன் சரித் அசலங்க ஜோடி சேர்ந்தார்கள். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி அதிரடியாக 109 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தது. நிசான் மதுஷ்க 54 பந்தில் 69 ரன்கள், கேப்டன் சரித் அசலங்க 71 பந்தில் 77 ரன்கள் எடுத்தார்கள்.

அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ் 21 பந்தில் 30* ரன்கள், ஜனித் லியாங்கே 18 பந்தில் 18* ரன்கள் எடுத்தார்கள். இலங்கை அணி 31.5 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 234 ரங்கன் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.