Bigg Boss Tamil 8: பிக்பாஸ் போட்டியாளர்கள் முழுமையான பட்டியல் இங்கே!

சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், பட வேலைகள் இருப்பதாக ஒதுங்கிக்கொள்ள, அவருக்கு பதிலாக விஜய் சேதுபதியை களமிறக்கி இருக்கிறது விஜய் டிவி

Oct 4, 2024 - 20:17
Bigg Boss Tamil 8: பிக்பாஸ் போட்டியாளர்கள் முழுமையான பட்டியல் இங்கே!

சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், பட வேலைகள் இருப்பதாக ஒதுங்கிக்கொள்ள, அவருக்கு பதிலாக விஜய் சேதுபதியை களமிறக்கி இருக்கிறது விஜய் டிவி

சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் செல்லும் இந்த சீசன் வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான புரோமோவும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போகும் போட்டியாளர்கள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பால் டப்பா  - அதன் படி ‘மக்காமஷி’ பாடல் உட்பட பல ராப் பாடல்களை பாடி சமூகவலைதளங்களில் வைரலான ‘பால் டப்பா’ அனீஸ் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய இருக்கிறார்.

சௌந்தர்யா நஞ்சுண்டன்  - மாடலிங்கில் களமிறங்கி, 'தர்பார்', 'ஆதித்ய வர்மா' உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்த சௌந்தர்யா நஞ்சுண்டனும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

கோகுல் நாத் - 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் பங்கேற்றவரும், சில படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்தவருமான டான்ஸ் மாஸ்டர் கோகுல்நாத் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்.

 நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் - ‘ஆறு’ படத்தில் ‘சவுண்ட் சரோஜா’ கதாபாத்திரம் உட்பட பல கேரக்டர்களில் நடித்தவரான நடிகை ஐஸ்வர்யாவும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல டிக் செய்யப்பட்டு இருக்கிறார்.

தொகுப்பாளர் விஷால் - அதே போல, தொகுப்பாளர் விஷாலும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறாராம்.

தயாரிப்பாளர் ரவீந்தர் - பிரபல தயாரிப்பாளரும், விமர்சகருமான ரவீந்தர் பிக்பாஸ் சீசன் 8 -ல் பங்கேற்க இருக்கிறார்.

நடிகர் ரஞ்சித் - ‘பாண்டவர் பூமி’ 'மறுமலர்ச்சி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவரும், அண்மையில் ‘கவுண்டம்பாளையம்’ படத்தை இயக்கி நடித்தவருமான சர்ச்சைக்கு பேர் போன நடிகர் ரஞ்சித்தும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்.

நடிகர் அர்னவ் - விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘செல்லமே’ சீரியலில் நடித்தவரும், ஸ்ரீதிவ்யாவை கல்யாணம் செய்து கொண்டு பின்னர் ஏற்பட்ட பிரச்சினையால், ஜெயில் வரை சென்று சர்ச்சையில் சிக்கியவருமான அர்னவ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் அருண் - ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் பிரபலமான நடிகர் அருண் பிரசாத் பிக்பாஸ் சீசன் 8 -ல் பங்கேற்க இருக்கிறார். இவர் முந்தைய சீசன் பிக்பாஸ் வின்னரான அர்ச்சனாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் தீபக் - பல சீரியல்களில் நடித்தவரும், பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவருமான நடிகர் தீபக்கிற்கு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியினுள் செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

சந்தோஷ் பிரதாப் - ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தில் நடித்து நடிகராக அறிமுகமான நடிகர் சந்தோஷ் பிரதாப், தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் இவர் நடித்த ராமர் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. இவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்.

ஜாக்குலின் - விஜயின் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமான நடிகை ஜாக்குலின் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்.

பவித்ரா ஜனனி - ‘ஆஃபீஸ்’, ‘சரவணன் மீனாட்சி’, ‘பகல் நிலவு’ உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்த பவித்ரா ஜனனிக்கு பிக்பாஸ் டிக் அடித்திருக்கிறார்.

அதே போல நடிகை சஞ்சனா, ‘குக் வித் கோமாளி புகழ்’ நடிகைகள் சுனிதா, நடிகை ஷாலின் சோயா உள்ளிட்டோரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.