ஒல்லாந்தர் காலத்து நாணயங்கள் விற்பனை செய்ய முயற்சித்தவர் ஹட்டனில் கைது

ஒல்லாந்தர் காலத்து கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Oct 17, 2024 - 15:03
ஒல்லாந்தர் காலத்து நாணயங்கள் விற்பனை செய்ய முயற்சித்தவர் ஹட்டனில் கைது

ஒல்லாந்தர் காலத்து கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 இலட்சம் ரூபாய்க்கு ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்த கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்த நபரை ஹட்டன் பொலிஸார் இன்று (17) கைது செய்துள்ளனர்.

கினிகத்தேனை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர், ஹட்டன் பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு 20 இலட்சம் ரூபாய்க்கு கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்துள்ளார்.

சந்தேகநபருக்கு கேடயம் மற்றும் இரண்டு நாணயங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து சந்தேகநபர் எதுவும் கூறவில்லை எனவும், தொல்பொருள் திணைக்களத்திற்கு இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (17) இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஒல்லாந்தர் கால "கிழக்கிந்திய கம்பனி"  எனும் பெயரைக் குறிக்கும் வகையில் VOC என குறியீடு பொறிக்கப்பட்ட இந் நாணயம் 1732 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும்.

(க.கிஷாந்தன்)

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.