நாட்டின் பல மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை

நாட்டில் மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (23) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

Oct 23, 2024 - 07:05
நாட்டின் பல மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை

நாட்டில் மேல், சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (23) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன், மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Also Read: இலங்கை கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் 

ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.