கால்பந்து ஜாம்பவானின் சாதனையை தகர்த்த 16 வயது வீரர்

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. 

Jul 11, 2024 - 07:14
கால்பந்து ஜாம்பவானின் சாதனையை தகர்த்த 16 வயது வீரர்

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. 

இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின்-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

தொடக்கம் முதலே அனல்பறந்த இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

ஸ்பெயின் தரப்பில் லாமின் யாமல் மற்றும் டேனி ஓல்மோ தலா 1 கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தில் கோலடித்த ஸ்பெயின் வீரர் லாமின் யாமலுக்கு 16 வயது 362 நாட்கள்தான் ஆகிறது. 

இதன் மூலம் உலகக் கோப்பை மற்றும் யூரோ சாம்பியன்ஷிப் வரலாற்றில் குறைந்த வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்தினார். 

இதற்கு முன்பு 1958-ம் ஆண்டு உலகக் கோப்பையில் வேல்சுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் ஜாம்பவான் பீலே 17 வயது 239 நாட்களில் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள லாமின் புதிய சாதனை படைத்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.