வெளிநாட்டு சிகரெட் பக்கெற்றுடன் இருவர் கைது  

இதன்போது 20,200 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி பல இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Oct 3, 2024 - 11:43
வெளிநாட்டு சிகரெட் பக்கெற்றுடன் இருவர் கைது  

சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை ஓட்டோவில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேகநபர்களை, கல்முனை விசேட அதிரடிப் படையினர்  வியாழக்கிழமை (3) அதிகாலை கைது செய்தனர்.

இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பெரிய நீலாவணை விசேட அதிரடி படை முகாமில் இருந்து விசேட தேர்ச்சி பெற்ற அணியினர் மேற்கொண்ட  தேடுதல் நடவடிக்கையில், அம்பாறை மாவட்டம் - கல்முனை பிரதான வீதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான முறையில் பயணம் செய்த ஓட்டோவை இடைமறித்து சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த ஓட்டோவில் சூட்சுமமான முறையில் பயணப் பொதியில்  கடத்தி  வரப்பட்ட  பெருந்தொகையான சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் பக்கெற்றுக்கள் மீட்கப்பட்டதுடன், இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.  

இதன்போது 20,200 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி பல இலட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் கல்முனை பகுதியில் உள்ள பாதணிகள் விற்கின்ற கடை ஒன்றிற்கு கடத்த முற்பட்ட வேளை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓட்டோவில் பயணம் செய்த கல்முனை கடற்கரைப் பள்ளி வீதியை சேர்ந்த 58 வயதுடைய சந்தேகநபர் உட்பட மருதமுனை ஹாஜியார் வீதி பகுதியை சேர்ந்த 72 வயதுடைய சந்தேகநபரையும்  விசேட அதிரடிப்படையினர் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர்கள் சான்றுப் பொருட்களுடன் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில்   மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்கின்றனர்.

(பாறுக் ஷிஹான்)

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.