18 வயதுக்குள் 14 சிகரங்களில் ஏறி சாதனை படைத்த இளைஞன்

உலகில் 8,000 மீட்டர் உயரத்தில் இருக்கும் 14 சிகரங்களில் ஏறிய குறைந்த வயதுடையவர் என்ற சாதனையை 18 வயது மலையேறி புரிந்திருக்கிறார்.

Oct 10, 2024 - 06:54
18 வயதுக்குள் 14 சிகரங்களில் ஏறி சாதனை படைத்த இளைஞன்

உலகில் 8,000 மீட்டர் உயரத்தில் இருக்கும் 14 சிகரங்களில் ஏறிய குறைந்த வயதுடையவர் என்ற சாதனையை 18 வயது மலையேறி புரிந்திருக்கிறார்.

நிமா ரிஞ்சி ஷெர்பா நேப்பாளத்தைச் சேர்ந்தவர். நேற்று (அக்டோபர்9 ) காலை அவர் திபெத்தின் ஷீஷா பாங்மா மலையை ஏறி அந்தச் சாதனையைப் படைத்தார்.

அந்த மலை 8,027 மீட்டர் உயரமானதாகும், 8,000 மீட்டர் உயரத்தில் ஓங்கிநிற்கும் 14 மலைகளையும் ஏறுவது மலையேறிகளின் கனவு.

அந்த முயற்சியில் ஒட்சிசன் இல்லாத பகுதிகளைக் கடந்து உயிர்பிழைக்க வேண்டிய நிலைகளை மலையேறிகள் எதிர்நோக்குகின்றனர்.

மலையேறும் கனவைக் கொண்ட அனைவருக்கும் தமது சாதனையை அர்ப்பணிப்பதாகக் கூறினார் நிமா ஷெர்பா.

இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டில் 30 வயது மிங்மா கியாபூ 'டேவிட்' ஷெர்பா உலகின் 8,000 மீட்டர் உயரத்தில் இருக்கும் 14 மலைகளை ஏறிய வயது குறைந்தவர் என்ற சாதனையைப் புரிந்திருந்தார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.