வான்வெளி தாக்குதலில் லெபனானில் உயிரிழந்தோர் தொகை அதிகரிப்பு

இஸ்ரேலின் நடவடிக்கைகள் அழிவை ஏற்படுத்தும் போரைப் போன்றது என்று லெபனான் பிரதமர் குற்றஞ்சாட்டினார்.

Sep 25, 2024 - 10:46
Sep 25, 2024 - 10:47
வான்வெளி தாக்குதலில் லெபனானில் உயிரிழந்தோர் தொகை அதிகரிப்பு

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 558ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 50 சிறுவர்கள் மற்றும் 94 பெண்கள் உள்ளடங்கியுள்ளனர். அத்துடன், இத்தாக்குதலில் 2,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் நேற்று முன்தினம் (23) நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலே மிக மோசமான தாக்குதலாக கருதப்படுகிறது. 

கடந்த ஆண்டிலிருந்து இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா குழுவினருக்கும் இடையே பூசல் தொடர்கிறது. இந்நிலையில், ஹிஸ்புல்லா குழுவிற்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் விரிவுபடுத்தியுள்ளது.

ஹிஸ்புல்லா புழங்கும் இடங்களை விட்டு வெளியேறும்படி, தென் லெபனான் மக்களுக்கு கைத்தொலைபேசியில் எச்சரிக்கைக் குறிப்பு அனுப்பியது இஸ்ரேலிய இராணுவம். இஸ்ரேலின் நடவடிக்கைகள் அழிவை ஏற்படுத்தும் போரைப் போன்றது என்று லெபனான் பிரதமர் குற்றஞ்சாட்டினார். 

எனினும், இஸ்ரேலின் வட பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்பும் வரை இத்தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்து பிரஜைகளுக்கு அவசர அறிவுறுத்தல்

இதேவேளை, லெபனானில் தங்கியுள்ள இங்கிலாந்து பிரஜைகளை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு, இங்கிலாந்து பிரதமர்  கேய்ர் ஸ்டார்மர் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளார். 

லெபனானில் வசிக்கும் இங்கிலாந்து பிரஜைகளின் பாதுக்காபை கருத்திற்கொண்டு, உடனடியாக லெபனான் நாட்டை விட்டு வெளியேறுமாறு இங்கிலாந்து பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.