சினிமாவில் வில்லனாக கலக்கி வரும் இந்த பிரபல நடிகர் யார் என தெரியுமா?

திரையுலகினரின் சின்ன வயது குழந்தை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Jun 22, 2024 - 09:10

திரையுலகினரின் சின்ன வயது குழந்தை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது இந்த பிரபல நடிகரின் சிறுவயது குழந்தை புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது.

தமிழ், மலையாளம் மொழிகளில் மிகவும் பிரபல நடிகராக வலம் வரும் இந்த நடிகருக்கு ரசிகர்கள் அதிகம். ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் குணச்சித்திர வேடங்கள், வில்லன், என அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் இந்த நடிகர் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க மறப்பதில்லை.

ஆரம்பகாலகட்டத்தில் அறிமுகமான முதல் படம் இவருக்கு தோல்வியை தந்தது, மேலும் இவருக்கு நடிக்க வரவில்லை என்று பல விதமான விமர்சனங்கள் இவர் மேல் வைக்கப்பட்டது. அதன் பின் 7 வருடங்கள் சினிமாவில் இருந்து விலகியிருந்த இந்த நடிகர் அதன் பின் மாஸ் காம்பேக் கொடுத்து திரையுலகை தனது நடிப்பால் திரும்பி பார்க்க வைத்தார்.

இந்த பிரபல நடிகரின் தந்தை மிகவும் தமிழ் மலையாள திரையுலகின் மிகவும் பிரபல இயக்குனர். இவரது மனைவி மலையாள தமிழ் சினிமாவின் அனைவரின் பேவோரைட் நடிகை. சூப்பர் டீலக்ஸ் , விக்ரம், மாமன்னன், தற்போது வேட்டையன் என அடுத்தடுத்து படங்களில் பிஸியாகி நடித்து வரும் நடிகர் பகத் பாசில் தான் இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை.

வருஷம் 16, பூவே பூச்சூடவா, காதலுக்கு மரியாதை போன்ற வெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு கொடுத்த இயக்குனர் பாசிலின் மகன் தான் பிரபல நடிகர் பகத் பாசில். பிரபல நடிகை நஸ்ரியாவின் கணவர் இவர், தமிழ் மலையாளம் என பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான இவருக்கு எக்கச்சக்க பேன்ஸ். நடிகர் பகத் பாசிலின் அழகிய குழந்தை வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.