தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினர் வேட்புமனு தாக்கல்

கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் செயலாளர் பிரசாந்தன் ஆகியோர் தலைமையில் குறித்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

Oct 11, 2024 - 08:53
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினர் வேட்புமனு தாக்கல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினர் நேற்று வியாழக்கிழமை (10) மாலை வேட்புமனுத் தாக்கல் செய்தனர். 

கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் செயலாளர் பிரசாந்தன் ஆகியோர் தலைமையில் குறித்த வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது தேசிய பட்டியல் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, அம்பாறை மாவட்டத்தில் ஓர் ஆசனம் எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு தவறும் பட்சத்தில் குறித்த தேசிய பட்டியலை அம்பாறை மாவட்டத்திற்கு ஒதுக்குவதாகவும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவதேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். 

வேட்புமனு தாக்கல் செய்த கட்சி உறுப்பினர்கள் விவரம் 

1. தே.சர்வானந்தம்
2. ப.சுகிதரன்
3. மு.விக்கினேஸ்வரன்
4. க.குலமணி
5. தெ.நவநீதராஜ்
6. வெ.மோகன்
7.சோ.விபுலானந்ததாஸ்
 8. கோ.லோகிதரூபன்
9.சே.ரசிகரன்
10. அ.விஸ்கரன்

(கஜனா)

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.