இந்தியாவின் வெற்றியுடன் ஓய்வை அறிவித்த சீனியர் வீரர்: கடைசி போட்டியில் அவர் அடித்த ரன் இதுதான்!

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி, துவக்கம் முதலே காட்டடி அடித்து அசத்தியது. ஓபனர் அபிஷேக் சர்மா 4 (4) மட்டுமே சொதப்பினார். 

Oct 13, 2024 - 08:42
Oct 13, 2024 - 11:00
இந்தியாவின் வெற்றியுடன் ஓய்வை அறிவித்த சீனியர் வீரர்: கடைசி போட்டியில் அவர் அடித்த ரன் இதுதான்!

இந்தியா வந்த வங்கதேச அணிகளுக்கு இடையிலான , டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்ற நிலையில், மூன்றாவது டி20 போட்டி, ஹைதராபாத்தில் நேற்று நடந்தது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி, துவக்கம் முதலே காட்டடி அடித்து அசத்தியது. ஓபனர் அபிஷேக் சர்மா 4 (4) மட்டுமே சொதப்பினார். 

மற்ற அனைத்து பேட்டர்களும் தொடர்ந்து, காட்டடி அடித்து அசத்தினார்கள். குறிப்பாக, திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சஞ்சு சாம்சன், தொடர்ந்து அதிரடி காட்டினார்.

சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 11 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 111 ரன்களை குவித்து, சர்வதேச டி20-யில் அறிமுக சதத்தை பூர்த்தி செய்தார். குறிப்பாக, பவுண்டரி சிக்ஸர்கள் மூலம் மட்டும், 11 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 19 பந்துகளில் மட்டும் 92 ரன்களை குவித்து அசத்தினார். 

மேலும், சர்வதேச டி20-யில் 40 பந்தில் சிக்ஸர் அடித்து, தற்போது இந்திய அணியில் இருக்கும் டி20 வீரர்களில் சாம்சன்தான் அதிவேக சதம் அடித்தவராக திகழ்கிறார். இதற்குமுன், ரோஹித் 35 பந்தில் அடித்ததே சாதனையாக இருந்தது.

சாம்சனைப் போல, கேப்டன் சூர்யகுமார் யாதவும் 35 பந்தில் 75 ரன்களை குவித்தார். அதில், 8 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்படும். மேலும், ரியான் பராக் 34 (13), ஹர்திக் பாண்டியா 47 (18) ஆகியோரும் தொடர்ந்து காட்டடி அடித்தார்கள். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 297/6 ரன்களை குவித்து அசத்தியது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய வங்கதேச அணியில், லிடன் தாஸ் 42 (25), டௌகித் ரிடோய் 62 (40) ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார்கள். ஓபனர் பர்விஸ் ஹோசைன் 0 (1) மயங்க் யாதவின் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார்.

மேலும், இப்போட்டியுடன் ஓய்வுபெறும் முகமதுல்லா 8 (9) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இறுதியில், வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 164/7 ரன்களை மட்டும் எடுத்து, 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இப்போட்டியுடன் சர்வதேச டி20யில் இருந்து ஓய்வுபெறும் முகதுல்லா, 140 சர்வதேச டி20 போட்டியில் விளையாடி, 23.64 சராசரி, 117 ஸ்ட்ரைக் ரேட்டில் 2435 ரன்களை அடித்தார். அதில், 8 அரை சதங்களும் அடங்கும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.