ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு -  சதம் அடித்த வீரர் புறக்கணிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

இலங்கை செல்லும் இந்திய அணி, தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.

Jul 19, 2024 - 07:54
ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு -  சதம் அடித்த வீரர் புறக்கணிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

இலங்கை செல்லும் இந்திய அணி, தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.

ஜூலை 27ஆம் தேதி முதல் இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்கும். முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27, 28, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய தேதிகளில் ஒருநாள் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை தொடருக்கான இந்திய ஒருநாள் அணியை, பிசிசிஐ தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கு முன், இலங்கை ஒருநாள் தொடர், அடுத்து பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்தியா விளையாடும்.

இதனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சீனியர்கள் இடம்பெற்றாக வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சீனியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கைக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

இதேவேளை, இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் இளம் வீரர்கள்தான் அதிகம் இடம்பெற்றுள்ளனர். ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் பதவியை, சூர்யகுமார் யாதவிடம் கொடுத்துள்ளனர்.

இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ரிங்கு சிங், ரிஷப் பந்த், ரியான் பராக், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.

இந்திய ஒருநாள் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை புறக்கணித்துள்ளனர். கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த இவரை, ஒருநாள் அணியில் சேர்க்காததற்கு பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ருதுராஜ் கெய்க்வாட்டிற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.