தோல்விக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஓய்வு முடிவு? ரசிகர்கள் ஷாக்!

கே.எல்.ராகுல் பார்ம் அவுட்டில் இருந்தபோதும், பெங்களூர் சின்னச்சாமி மைதானம், இவருக்கு அனுபவம் வாய்ந்தது என்பதால்தான், அணியில் சேர்க்கப்பட்டார்.

Oct 22, 2024 - 07:12
Oct 22, 2024 - 07:12
தோல்விக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஓய்வு முடிவு? ரசிகர்கள் ஷாக்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களில் ஆட்டமிழந்த போதும், இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டதுடன், கே.எல்.ராகுல் சொதப்பியது, தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கே.எல்.ராகுல் பார்ம் அவுட்டில் இருந்தபோதும், பெங்களூர் சின்னச்சாமி மைதானம், இவருக்கு அனுபவம் வாய்ந்தது என்பதால்தான், அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் டக்அவுட் ஆனார். தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவர், அதில், 12 ரன்களை மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால், ரசிகர்கள் இவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

கே.எல்.ராகுல் சொதப்பியிருக்கும் அதேவேளையில், சர்பரஸ் கான் முதல் இன்னிங்ஸில் டக்அவுட் ஆகி, அதன்பிறகு 150 ரன்களை அடித்து, ஹீரோவாக மாறியுள்ளார். இதனால், இனி சர்பரஸ் கானுக்கு ரெகுலர் வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.

மேலும், விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பந்த் இருப்பதாலும், இனி 32 வயதாகும் கே.எல்.ராகுலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காது எனக் கருதப்படுகிறது.

முதல் டெஸ்டில், ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டதால்தான், சர்பரஸ் கானை அணியில் சேர்த்தனர். தற்போது,சர்பரஸ் கான் 150 ரன்களை அடித்து இடத்தை தக்கவைத்துக் கொண்டதால், 2ஆவது டெஸ்டிற்கு ஷுப்மன் கில் வந்ததும் கே.எல்.ராகுலைதான் லெவன் அணியில் இருந்து நீக்குவார்கள் எனக் கருதப்படுகிறது.

மேலும், 32 வயதாகும் கே.எல்.ராகுலுக்கு இனிமேல் டெஸ்ட் வாய்ப்பை கொடுக்க கூடாது, மாற்றாக சர்பரஸ் கானை ரெகுலராக களமிறக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டி முடிந்தப் பிறகு, பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தை கே.எல்.ராகுல் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வெளியேறியிருக்கிறார். 

இதனால், டெஸ்ட் பார்மெட்டில் இருந்து கே.எல்.ராகுல் ஓய்வு அறிவித்துவிட்டு, ஒருநாள் மற்றும் டி20 பார்மெட்டில் மட்டும் ரெகுலராக விளையாட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.