மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு

இந்திய நேரப்படி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொது மக்கள் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என அவர் கூறியுள்ளார்.

Oct 10, 2024 - 06:47
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக மும்பையிலுள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் வைக்கப்படும் என்று மகராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இந்திய நேரப்படி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொது மக்கள் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என அவர் கூறியுள்ளார்.

அவரது மறைவையொட்டி மகராஷ்டிரா மாநிலத்தில் இன்று நடைபெறவிருந்த அனைத்து அரசாங்க நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று திரு ஷிண்டே கூறியுள்ளார்.

திரு ரத்தன் டாடா நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மும்பையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் நேற்றிரவு (9 அக்டோபர்) உயிரிழந்ததுடன், அவருக்கு 86 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.