பிளாஸ்டிக் போத்தல் தண்ணீர் ஏன் குடிக்கவே கூடாது? வெளியான எச்சரிக்கை

கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமாகவும், பத்திரப்படுத்தி வைக்கப்பட்டது போலவும் தெரியலாம். ஆனால் அந்த தண்ணீரில் தான் மிகப்பெரிய ஆரோக்கிய பிரச்சனைகளே மறைந்து இருக்கின்றன. 

Aug 4, 2024 - 08:14
பிளாஸ்டிக் போத்தல் தண்ணீர் ஏன் குடிக்கவே கூடாது? வெளியான எச்சரிக்கை

கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமாகவும், பத்திரப்படுத்தி வைக்கப்பட்டது போலவும் தெரியலாம். ஆனால் அந்த தண்ணீரில் தான் மிகப்பெரிய ஆரோக்கிய பிரச்சனைகளே மறைந்து இருக்கின்றன. 

பேக்கேஜ் செய்யப்பட்ட பாட்டில், பாக்கெட் தண்ணீர் காலநிலை மாற்றத்துக்கு பெரிதும் பங்களிப்பது மட்டுமின்றி, ஆரோக்கியத்துக்கும் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதனால் பாக்கெட் தண்ணீரை ஏன் முற்றிலும் குடிக்காமல் இருப்பதே நல்லது என்பதற்கான காரணங்களை பார்க்கலாம்.

பாட்டில் தண்ணீரில் ரசாயனங்கள்

பாட்டில் அல்லது பாலித்தீன் கவர்களை உருவாக்க பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இது காலப்போக்கில் ஆண்டிமனி மற்றும் பித்தலேட்டுகள் போன்றவற்றை இதில் ஸ்டோரேஜ் செய்யப்பட்ட தண்ணீருக்குள் வெளியிடுகின்றன. 

இவை காலப்போக்கில் நாளமில்லாச் சுரப்பியின் செயல்பாட்டை சீர்குலைத்து, இனப்பெருக்க பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றன.

மைக்ரோபிளாஸ்டிக் ஊடுருவல்

அனைத்து பாட்டில் வாட்டர் பிராண்டுகளிலும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கிட்டத்தட்ட இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆர்ப் மீடியா நடத்திய ஆய்வில் 11 வெவ்வேறு பிராண்டுகளில் இருந்து 259 பாட்டில்கள் சோதனை செய்யப்பட்டு அவற்றில் 93% மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பதைக் கண்டறிந்தது. 
இந்த சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் உடலில் குவிந்து, உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது குறித்து இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவை என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு

குழாய் தண்ணீரைக் காட்டிலும் பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவை. குழாய் நீரில் பொதுவாக கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன, அவை நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் பாட்டில் தண்ணீரில் இத்தகைய ஊட்டச்சத்துகள் இல்லை அல்லது குறைவாக இருக்கின்றன என்கிறது ஆய்வுகள்

பாக்டீரியா தொற்று

பாட்டில் தண்ணீர் பெரும்பாலும் குழாய் நீரை விட தூய்மையானது என்று சந்தைப்படுத்தப்பட்டாலும், உண்மையில் அப்படி இல்லை. அமெரிக்காவின் உணவு பாதுகாப்பு அமைப்பு எப்டிஏ நடத்திய ஆய்வில் பாட்டில் தண்ணீரில் அதிக பாக்டீரியா தொற்றுகள் இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 

பாட்டில் தண்ணீரில் உள்ள பாக்டீரியா, இரைப்பை குடல் தொற்று மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.