இங்கிலாந்தை துவம்சம் செய்து ஆஸி அபார வெற்றி!

ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது. 

Jun 27, 2023 - 06:43
இங்கிலாந்தை துவம்சம் செய்து ஆஸி அபார வெற்றி!
Image Source: Google

ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடிவருகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜூன் 23ஆம் தேதி நாட்டிங்ஹாமில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் எல்லிஸ் பெர்ரி மற்றும் அனபெல் சதர்லேண்ட் ஆகியோரது அபார ஆட்டத்தின் மூலம் 473 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக சதர்லேண்ட் 137 ரன்களையும், எல்லிஸ் பெர்ரி 99 ரன்களையும் சேர்த்தனர்.இங்கிலாந்து அணி தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 5 விக்கெட்டுகளையும், லௌரன் பெல், லௌரன் ஃபிலெர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு இலங்கை அணி தெரிவானது

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணில் டாமி பியூமண்ட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டைசதமடித்து அசத்தினார். 

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் வீராங்கனை எனும் சாதனையையும் படைத்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 463 ரன்களைச் சேர்த்து, 10 ரன்கள் பின் தங்கியது. 

அதன்பின் இரண்டாவது  இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பெத் மூனி 85 ரன்களையும், அலீசா ஹீலி 50 ரன்களையும், லிட்ச்ஃபீல்ட் 46 ரன்களையும் சேர்க்க 257 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. 

இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய சோபி எக்லெஸ்டோன் மீண்டும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 268 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

37 வயதில் சிக்கந்தர் ராஸா அதிவேக சதம்...  இலங்கைக்கு வில்லனாகும் ஜிம்பாப்வே!

இதையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டேனியல் வையட்டைத் தவிர மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதில் இறுதிவரை போராடிய டேனியல் வையட் மட்டும் 54 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.  இதனால் இங்கிலாந்து அணி 178 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.  

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆஷ்லே கார்ட்னர் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்து அணியை நிர்மூலமாக்கினார். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டின் வெற்றிக்கு காரணமாக அமைந்த ஆஷ்லே கார்ட்னர் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Editorial Staff நான் பத்திரிகை துறையில் கடந்த 13 வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன். விளையாட்டு செய்திகளை, அரசியல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம். உடனுக்குடன் செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் தனி ஆர்வம் உண்டு.